
நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரண்டு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 267 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி தொடரில் முன்னிலை பெற்றது இங்கிலாந்து அணி.
இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று வெல்லிங்டன் நகரில் துவங்கியது. டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்த அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. காலையில் நிலவிய பந்து வீச்சிக்கு சாதகமான சூழ்நிலையை பயன்படுத்திய நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்து அணியின் மூன்று விக்கெட்டுகளை 21 ரன்களுக்குள் வீழ்த்தினர்.
அதன் பிறகு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் உடன் ஜோடி சேர்ந்தார் நம்பிக்கை நட்சத்திரம் ஹாரி ப்ரூக்ஸ். ரூட் ஒருபுறம் நிதானமாக ஆட ஹாரி ப்ரூக்ஸ் தனது வழக்கமான அதிரடி பாணியில் ரண்களை குவிக்க ஆரம்பித்தனர் . இதனால் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. சிறப்பாக ஆடிய ஹாரி ப்ரூக்ஸ் டெஸ்ட் போட்டிகளில் தனது நான்காவது சதத்தை பதிவு செய்தார். இதுவரை ஆறு டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கும் புருக்ஸ் அடிக்கும் நான்காவது சதம் இதுவாகும் .