
ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றதுடன் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது.
அதேசமயம் இந்த தோல்வியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது அடுத்தடுத்த தோல்விகளின் காரணமாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏறத்தாழ இழந்துள்ளது. மேற்கொண்டு இப்போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் ஆட்டநாயகன் விருதை வென்றதுடன், ஐபிஎல் தொடரிலும் தனித்துவ சாதனையையும் படைத்து அசத்தியுள்ளது.
அதன்படி இப்போட்டியில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம், ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக முறை 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் எனும் சாதனையைப் பாடைத்துள்ளார். அவர் இதுவரை 111 இன்னிங்ஸ்களில் விளையாடி 4 முறை 4+ விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதன்மூலம் அவர் மோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோரின் சாதனைகளையும் முறியடித்துள்ளார்.