ENG vs IND: இந்திய அணியுடன் இணையும் ஹர்ஷித் ரானா?
ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியிடன் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானாவும் இணைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

England vs India Test Series: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியுடன் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானா பயணிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். ரோஹித் சா்மா, விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் இல்லாத நிலையில், இளம் வீரா் ஷுப்மன் கில் தலைமையில் இந்திய அணி தற்போது இங்கிலாந்து சென்றுள்ளது.
மேற்கொண்டு சாய் சுதர்ஷன், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், கருண் நாயர் மற்றும் ஷர்தூல் தாக்கூர் உள்ளிட்டோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள்து. அதேநேரத்தில் பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த அக்ஸர் படேல், ஹர்ஷித் ரானா, சர்ஃப்ராஸ் கான் உள்ளிட்டோர் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து சர்ஃப்ராஸ் மற்றும் ஹர்ஷித் ரானா இருவரும் இந்திய ஏ அணியில் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்கள் இருவரும் இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நிலையில் அதில் சர்ஃப்ராஸ் கான் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தார். அதேசமயம் ஹர்ஷித் ரானா பந்துவீச்சில் பெரிதளவில் சோபிக்க தவறியதுடன் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்திருந்தார். இதுபோன்ற சூழலில் தான் ஹர்ஷித் ரானா இந்திய டெஸ்ட் அணியுடன் பயணிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Harshit Rana is reportedly being told to stay back in the United Kingdom and might get added in the senior team for the five-match Test series against England! pic.twitter.com/3th1FIO1R4
— CRICKETNMORE (@cricketnmore) June 16, 2025
இங்கிலாந்து டெஸ்ட் தொடர் மற்றும் கவுண்டி கிரிக்கெட் அணிகளில் இடம்பிடித்துள்ள வீரர்களைத் தவிர்த்து மற்ற இந்திய ஏ அணி வீரர்கள் நாடு திரும்பவுள்ள நிலையில், ஹர்ஷித் ரானா இந்திய டெஸ்ட் அணியுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், அவர் அதிகாரப்பூர்வமாக டெஸ்ட் அணியில் சேர்க்கப்படுவாரா இல்லையா என்பது குறித்து தற்போது எந்த தெளிவும் இல்லை. ஒருவேளை யேரெனும் காயத்தை சந்தித்தால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
Also Read: LIVE Cricket Score
முன்னதாக கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பர்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் மூலம் இந்திய டெஸ்ட் அணிக்காக அறிமுகமான ஹர்ஷித் ரானா தனது முதல் போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இருப்பினும் அடுத்தடுத்த போட்டிகளில் அவரது செயல்பாடுகள் பெரிதளவில் அணிக்கு உதவாததன் காரண்மாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் நீக்கப்பட்ட அவர், தற்சமயம் அணியுடன் பணிக்கவுள்ளது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now