
Indian Cricket Team: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லீட்ஸில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகிக்கிறது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி ஜூலை 2ஆம் தேதி பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ளது.
இதில் ஏற்கெனவே முதல் போட்டியில் வெற்றிக்கு அருகில் இருந்து தோல்வியைத் தழுவிய இந்திய அணி இப்போட்டியில் எவ்வாறு கம்பேக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணி குறித்து அதிகாரப்பூர்வமற்ற தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருந்த ஹர்ஷித் ராணா தற்போது அணியில் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.