
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது. இந்திய அணியின் டாப் ஆர்டரில் பல வீரர்கள் ஏமாற்றிய போதும், ஸ்ரேயாஸ் ஐயர் தான் அதிகப்படியாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வந்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு, பவுன்சர் பந்து மிகப்பெரிய பலவீனம் என்பது வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. கொல்கத்தாவின் பயிற்சியாளராக இருந்த மெக்கல்லம் தான் இங்கிலாந்து அணி பயிற்சியாளர். இதனால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு தொடர்ந்து பவுன்சர் வீசும்படி மெக்கல்லம் சிக்னல் கொடுக்க, அது அப்படியே வெற்றிகரமாக அமைந்தது.
இங்கிலாந்து பவுலர்கள் வீசிய ஷார்ட் பந்துகளில் சிறிது நேரம் தப்பித்த ஸ்ரேயாஸ் ஐயர், ஒரு கட்டத்தில் மாட்டிக்கொண்டார். 19 பந்துகளில் 26 ரன்களை மட்டுமே எடுத்து ஏமாற்றினார். இதனால் இனி ஷார்ட் பால் பிரச்சினையை சரி செய்யாவிட்டால் ஸ்ரேயாஸுக்கு வாய்ப்பு கிடைக்காது என வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.