
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கி ஆஃப்கானிஸ்தான் முடிந்தளவுக்கு போராடி 49.5 ஓவரில் 284 ரன்கள் குவித்து அசத்தியது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக தொடக்க வீரர் ரஹ்மத்துல்லா குர்பாஸ் அதிரடியாக விளையாடி 80 ரன்களும் இக்ரம் அலிகில் 58 ரன்களும் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஆதில் ரஷித் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து 285 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்துக்கு ஜானி பேர்ஸ்டோவ் 2, டேவிட் மாலன் 32, ஜோ ரூட் 11, ஜோஸ் பட்லர் 9, சாம் கரன் 10, லியம் லிவிங்ஸ்டன் 10 என பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே ஆப்கானிஸ்தானின் தரமான பந்து வீச்சில் சீரான இடைவெளிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அதனால் அதனால் ஆரம்பம் முதலே அழுத்தத்தை சந்தித்த அந்த அணிக்கு 4ஆவது இடத்தில் களமிறங்கி முடிந்தளவுக்கு போராடிய இளம் வீரர் ஹாரி ப்ரூக் அதிரடியாக விளையாடி 66 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆனாலும் 40.3 ஓவரிலேயே இங்கிலாந்தை 215 ரன்களுக்கு சுருட்டி 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஅப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனார்.