
ஆஃப்கானிஸ்தானின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி. ஆஃப்கானிஸ்தான் அணிக்காக கடந்த 2013ஆம் ஆண்டு அறிமுகமான ஹஸ்மதுல்லா ஷாஹிதி இதுவரை 8 டெஸ்ட் போட்டிகள், 81 ஒருநாள் போட்டிகள் மற்றும் 6 டி20 போட்டிகளில் விளையாடிவுள்ளார்.
அதன்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சதம், 2 அரைசதங்கள் என 485 ரன்களையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 21 அரைசதங்களுடன் 2251 ரன்களையும் சேர்த்துள்ளார். இந்நிலையில் ஹஸ்மதுல்லா ஷாஹிதி தனது ஆல் டைம் ஒருநாள் அணியை தேர்வு செய்துள்ளார். அதன்படி அவர் தேர்வு செய்துள்ள இந்த அணியில் தொடக்க வீரர்களாக பாகிஸ்தானின் சயீத் அன்வர் மற்றும் இந்திய அணியின் ரோஹித் சர்மாவைத் தேர்வுசெய்துள்ளார்.
மேற்கொண்டு மூன்றாம் வரிசையில் இந்திய அணியின் விராட் கோலியையும், நான்காம் இடத்தில் குமார் சங்கக்காராவையும், 5ஆம் இடத்தில் இன்சமாம் உல் ஹக்கையும் தேர்வுசெய்துள்ளார். இதனைத்தொடர்ந்து இலங்கை அணியின் மஹேலா ஜெயவர்த்னேவையும், பாகிஸ்தானின் ரஷீத் லத்தீஃபையும், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ ஃபிலின்டாஃப் ஆகியோரையும் ஹஸ்மதுல்லா ஷாஹிதி தனது அணியில் சேர்த்துள்ளார்.