அபாரமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஹசன் கான் - வைரல் காணொளி!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான சிபில் லீக் போட்டியில் ஃபால்கன்ஸ் அணி வீரர் ஹசன் கான் அபாரமான கேட்ச்சை பிடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணிகள் பலபப்ரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஃபால்கன்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிட டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் பேரிஸ் 9 ரன்களுக்கும், சுனில் நரைன் 4 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 14 ரன்களிலும், கேசி கார்டி 8 ரன்களிலும் என ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த டிம் டேவிட் மற்றும் கேப்டன் கீரன் பொல்லார்ட் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
Trending
இதில் பொல்லார்ட் 47 ரன்களையும், டிம் டேவிட் 26 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் நைட் ரைடர்ஸ் அணியானது 8 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை மட்டுமே சேர்த்தது. அதன்பின் எளிய இலக்கை நோக்கி விளையாடிய ஃபால்கன்ஸ் அணியிலும் பிராண்டன் கிங் மற்றும் கோஃபி ஜேம்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.
பின்னர் மற்றொரு தொடக்க வீரரான ஜஸ்டின் க்ரீவ்ஸ் 46 ரன்கள் எடுத்த நிலையில் ரிட்டையர் ஹர்ட் முறையில் வெளியேற, அவருடன் இணைந்து விளையாடிய ஹசன் கானும் 36 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய இமாத் வசீம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் 36 ரன்களைச் சேர்க்க, ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
Hassan Khan with a screamer for tonight's Carib Catch #CPL24 #TKRvABF #CricketPlayedLouder #BiggestPartyInSport @Thecaribbeer pic.twitter.com/9hdPEl3fC8
— CPL T20 (@CPL) September 20, 2024
Also Read: Funding To Save Test Cricket
இந்நிலையில் இப்போட்டியில் ஃபால்கன்ஸ் அணி வீரர் ஹசன் கான் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் 14 ரன்களை எடுத்திருந்த நிலையில் சிக்ஸர் அடிக்க முயற்சித்து பந்தை சரியாக அடிக்க தவறினார். அதனை சரியாக கணித்த ஹசன் கான் ஓடிவந்து அபாரமான டைவ் அடித்து கேட்ச் பிடித்து அசத்தினார். இக்காணொளி தற்சமயம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now