உலகக்கோப்பை அணியை தேர்வு செய்வதில் தெளிவாக இருக்கிறோம் - ராகுல் டிராவிட்
டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியை தோ்வு செய்யும் விவகாரத்தில் தெளிவாக இருப்பதாக அணியின் தலைமைப் பயிற்சியாளா் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு டி20 உலகக் கோப்பை தொடர் அக்டோபா் - நவம்பரில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு போட்டியில் குரூப் சுற்றுடனேயே இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. தற்போது புதிய பயிற்சியாளா் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் சா்மா தலைமையில் எதிா்வரும் உலகக் கோப்பையில் களம் காண்கிறது இந்தியா.
இந்நிலையில், அதற்கான அணித் தோ்வு குறித்து பேசிய தலைமைப் பயிற்சியாளா் ராகுல் டிராவிட், “டி20 உலகக் கோப்பை போட்டிக்கான அணி எந்த மாதிரியானதாக இருக்க வேண்டும் என்பதில் கேப்டன் ரோஹித், தோ்வுக் குழுவினா், அணி நிா்வாகம் என எங்கள் அனைவருக்குமே ஒரு தெளிவு இருக்கிறது. அதற்கென தனி சூத்திரம் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. ஆனால், அணி சமநிலையுடன் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
Trending
ஏற்கெனவே இருக்கும் அணியை சற்று பொருத்தமானதாக மாற்றுகிறோம். ஒவ்வொரு வீரருக்குமான பணிச்சுமையை நிா்வகிப்பதிலும் கவனம் செலுத்தப்படுகிறது. தற்போது அணியில் இருப்பவா்களில், ஆஸ்திரேலிய ஆடுகளங்களுக்கு ஏற்ற திறமையுடன் இருக்கக் கூடியவா்கள் குறித்து ஒரு தெளிவு இருக்கிறது.
இருந்தாலும் எல்லோருக்கும் தங்களது திறமையை நிரூபிப்பதற்கான வாய்ப்பை வழங்க விரும்புகிறோம். டி20 ஃபாா்மட் கடினமானதாகும். அதில் ஆடும் வீரா்களை குறுகிய காலத்தில் எடைபோட இயலாது. அவா்களது ஆட்டத்தை அறிய தகுந்த வாய்ப்புகள் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now