
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி நவம்பர் 08ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது நவம்பர் 14ஆம் தேதி முடிவடையவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டி டர்பனிலும், இரண்டாவது போட்டி க்கெபெர்ஹாவிலும், மூன்றாவது போட்டி செஞ்சூரியனிலும், நான்காவது போட்டி ஜொஹன்னஸ்பர்க்கிலும் நடைபெறவுள்ளது.
இதில் இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றிய கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணியோ ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை இழந்த கையோடு இந்த டி20 தொடரை எதிர்கொள்ளவுள்ளது. மேற்கொண்டு இந்தாண்டு நடந்து முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் மோதிய இரு அணிகள் முதல் முறையாக மீண்டும் மோதவுள்ளதால் இத்தொடரை எந்த அணி கைப்பற்றும் என்பது குறித்து ரசிகர்கள் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், தனது கேப்டன்சி பாணி குறித்து சூர்யகுமார் யாதவ் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து பேசியா அவர், “ரோஹித் சர்மா அணி வீரர்களை எப்படி நடத்துகிறார், அவர்களிடமிருந்து என்ன எதிர்பார்ப்பார் என்பதை நான் அறிவேன். மேலும் அதனை பயன்படுத்தி அதில் அவர் வெற்றி பெற்றதால் நானும் அதே வழியை பின்பற்றி வருகிறேன். நான் மைதானத்தில் இருக்கும்போது, அவருடைய உடல் மொழி எப்படி இருக்கிறது, அழுத்தமான சூழ்நிலையில் அவர் எவ்வளவு அமைதியாக இருக்கிறார், பந்து வீச்சாளர்களிடம் எப்படிப் பேசுகிறார், மைதானத்திலும், மைதானத்துக்கு வெளியேயும் எப்படி நடந்துகொள்கிறார் என்பதை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன்.