Advertisement

அடுத்த 15 ஆண்டுகளுக்கு விளையாடும் திறன் கொண்டவர் சாய் சுதர்ஷன் - இர்ஃபான் பதான்!

வேகத்துக்கு சாதகமாக பேட்டிங்க்கு சவாலாக இருக்கக்கூடிய தென் ஆப்பிரிக்க மண்ணில் அசத்திய சாய் சுதர்சன் அடுத்த 10 – 15 வருடங்களுக்கு இந்தியாவுக்காக விளையாடும் திறமையை கொண்டிருப்பதை காண்பித்ததாக முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் பாராட்டியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan December 18, 2023 • 21:22 PM
அடுத்த 15 ஆண்டுகளுக்கு விளையாடும் திறன் கொண்டவர் சாய் சுதர்ஷன் - இர்ஃபான் பதான்!
அடுத்த 15 ஆண்டுகளுக்கு விளையாடும் திறன் கொண்டவர் சாய் சுதர்ஷன் - இர்ஃபான் பதான்! (Image Source: Google)
Advertisement

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. நேற்று ஜோஹன்னஸ்பர்க் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அர்ஷிதீப் 5, ஆவேஷ் கான் 4 விக்கெட்களை எடுத்த வேகத்திற்கு தாக்குப் பிடிக்க முடியாமல் 117 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து இலக்கை துரத்திய இந்தியாவுக்கு ஸ்ரேயாஸ் ஐயர் 52 ரன்களும், தமிழக வீரர் சாய் சுதர்சன் 55 ரன்கள் அடித்து எளிதாக வெற்றி பெற வைத்தனர். குறிப்பாக அப்போட்டியில் அறிமுகமாக விளையாடிய சாய் சுதர்சன் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் போட்டியிலேயே அரை சதமடித்த 4ஆவது இந்திய தொடக்க வீரர் என்ற சாதனை படைத்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார்.

Trending


முன்னதாக டிஎன்பிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் ஐபிஎல் தொடரில் குஜராத்து அணிக்காக அறிமுகமான அவர் 2023 இறுதிப்போட்டியில் சென்னைக்கு எதிராக 96 ரன்கள் குவித்து சச்சின் டெண்டுல்கர் உட்பட அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். அதைத்தொடர்ந்து இந்தியா ஏ அணிக்காக பாகிஸ்தானுக்கு எதிராக சதமடித்து வெற்றி பெற வைத்த அவர், கவுண்டி முதல் ரஞ்சி கோப்பை வரை அனைத்து விதமான உள்ளூர் தொடர்களிலும் கிடைத்த வாய்ப்புகளில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார்.

இதனால் இத்தொடரில் தேர்வான அவர் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் 400ஆவது வீரர் என்ற தனித்துவமான பெயரையும் பெற்றார். இந்நிலையில் வேகத்துக்கு சாதகமாக பேட்டிங்க்கு சவாலாக இருக்கக்கூடிய தென் ஆப்பிரிக்க மண்ணில் அசத்திய சாய் சுதர்சன் அடுத்த 10 – 15 வருடங்களுக்கு இந்தியாவுக்காக விளையாடும் திறமையை கொண்டிருப்பதை காண்பித்ததாக முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “தென் ஆப்பிரிக்கா ஆடுகளத்தில் இவ்வளவு சிறப்பாக ஒரு இளம் வீரரால் பேட் செய்ய முடிகிறது என்றால், இந்திய அணிக்காக அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்கு விளையாட கூடிய வீரரை கண்டுபிடித்துவிட்டீர்கள் என்று அர்த்தம். நிச்சயம் ஒரு போட்டியில் எந்த வீரரையும் முழுதாக அறிந்து கொள்ள முடியாது. ஆனால் சாய் சுதர்ஷன் மிகச்சிறப்பாக அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார். முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து தொடங்கினார்.

ஷார்ட் பால்களை நன்றாக எதிர்கொள்கிறார், கால்களை நகர்த்தி விளையாடும் திறமையை கொண்டுள்ளார், வேகப்பந்துவீச்சு மற்றும் சுழற்பந்துவீச்சை எளிதாக சமாளித்து ஆடுகிறார், ஃபிரண்ட் ஃபூட் மற்றும் பேக் ஃபூட்டில் விளையாட தெரிகிறது, ஸ்பின்னர்களை ஸ்வீப் ஷாட் ஆடுகிறார், ஒருவேளை வேகப்பந்துவீச்சாளர் ஸ்லோயர் பால்களை வீசினால் ஸ்டப் டவுன் செய்து பந்தை விளாச தெரிகிறது. இதன் மூலம் அவர் கிரிக்கெட்டை நன்றாக புரிந்து கொண்டுள்ளார் என்பது தெரிகிறது” என பாராட்டியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement