
ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நடத்திர வீரர் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளது அணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் யார் என்றும், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் இடங்களை யார் நிரப்புவார் என்ற கேள்விகளும் ரசிகர்கள் மத்தில் அதிகரித்துள்ளன.
மேற்கொண்டு ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் சாய் சுதர்ஷன், கருண் நாயர், ரஜத் படிதார், ஷர்தூல் தாக்கூர் உள்ளிட்டோருக்கும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புகளும் உள்ளன. இந்நிலையில் தற்போது தேர்ந்தெடுக்கப்படவுள்ள இந்திய அணியில் நம்பர் 4ஆம் இடத்தில் விளையாட கருண் நாயர் தான் சரியானா தேர்வாக இருப்பார் என்று முன்னாள் கேப்டன் மற்றும் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே கூறிவுள்ளார்.