ஸ்மித்தை விட இவர் தான் ஆபாத்தான வீரர் - இர்ஃபான் பதான்!
ஸ்மித்தை விட மார்னஸ் லபுசாக்னே தான் இந்தியாவிற்கு ஆபத்தான வீரர் என தெரிவித்திருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.
இந்திய - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் நான்கு நாட்களே இருக்கின்ற நிலையில் அதற்கான எதிர்பார்ப்புகள் இப்போது இருந்து ஆரம்பமாகிவிட்டன . இரு அணி வீரர்களும் இந்த டெஸ்ட் தொடர்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர் . ஆஸ்திரேலியா அணியினர் இந்திய சுழல் பந்துவீச்சாளர்களின் வியூகங்களை முறியடிக்கும் வகையில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் தரமான பந்துவீச்சாளர்களைக் கொண்டு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் .
பொதுவாக இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையான தொடர்களில் காணப்படும் கருத்து யுத்தங்களும் இப்போதே ஆரம்பமாகி விட்டன . ஆஸ்திரேலியா அணியின் ஸ்டீவன் ஸ்மித் சுழல் பந்துவீச்சிக்கு எதிராக விளையாடக்கூடிய ஒரு திறமையான வீரர் . அவர் இந்த தொடரில் இந்திய அணிக்கு பெரிய சவாலாக இருப்பார் என கிரிக்கெட் விமர்சகர்களும் வல்லுனர்களும் கருத்து தெரிவித்திருக்கின்றனர் .
Trending
ஆனால் ஸ்மித்தை விட மார்னஸ் லபுசாக்னே தான் இந்தியாவிற்கு ஆபத்தான வீரர் என தெரிவித்திருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய இர்ஃபான் பதான், “ஸ்டீவன் ஸ்மித்தை விட இவரிடம் பல விதமான ஷாட்டுகள் இருக்கின்றன. இதனால் இந்திய அணி இவருக்கு எதிரான திட்டங்களையும் வலுப்படுத்த வேண்டும்.
ஸ்டீவ் ஸ்மித்திற்கு எதிராக செய்யும் திட்டங்களே இவருக்கு எதிராகவும் நல்ல பலனை அளிக்கலாம் . ஆனால் ஸ்மித்தை விட சிறந்த ரேஞ்சைப் பெற்றுள்ளார் லபுசாக்னே . இதனால் அஸ்வின் ஆடுகளங்களில் இருக்கும் கடினமான பகுதிகளை பயன்படுத்தி பந்தை வீசும் போது அல்லது பந்தை வலது கை பேட்ஸ்மனுக்கு வெளிப்பக்கமாக எடுத்துச் செல்லும் போது எவ்வாறு சமாளிக்கிறார் என்பதை பார்க்க ஆவலாக உள்ளேன்.
மேலும் அவர் இடது கை பந்துவீச்சாளர்கள் தொடர்ச்சியாக ஆடுகளத்தில் இருக்கக்கூடிய கடினமான பகுதிகளை குறி வைத்து பந்து வீசும் போது ஸ்வீப் ஷாட்டுகள் ஆடி அவற்றை அட்டாக் செய்வாரா என்று பார்க்க இப்போதே ஆவலாக இருக்கிறேன் . மேலும் அவரது புள்ளி விவரங்கள் ஆசியாவில் அவ்வளவு சிறப்பாக இல்லை இது நமக்கு மகிழ்ச்சியான ஒன்று” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now