
நடப்பாண்டு ஐபிஎல் டி20 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்ற இளம் வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் சர்வதேச கிரிக்கெட் உலகை தனது பக்கம் திரும்பிப்பார்க்க வைத்துள்ளார். உம்ரான் மாலிக் பந்துவீச்சு வேகம், துல்லியம் ஆகியவை எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்னமாகஇருந்தது.
நடந்த முடிந்த ஐபிஎல் டி20 தொடரில் 22 விக்கெட்டுகளை வீழ்த்திய உம்ரான் மாலிக், 4ஆவது இடத்தைப் பிடித்தார். ஆனால், பந்துவீச்சில் அதிகமான ரன்களை விட்டுக்கொடுத்தாலும், மணிக்கு 150 கி.மீ வேகத்தில்வீசும் அவரின் பந்துவீச்சைப் பார்த்து எதிரணி பந்துவீச்சாளர்கள் மிரண்டது உண்மைதான்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, தனது யூடிப்பில், “ ஐபிஎல் தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட இளம் வீரர்களில் எத்தனை பேர் இந்திய அணிக்குள் செல்லக்கூடிய வாய்ப்பு பெற்றவர்கள்” என்று கணித்து காணொளியை வெளியிட்டார். அதில் அவர் முதலாவதாக உம்ரான் மாலிக்கைத்தான் குறிப்பிட்டுள்ளார்.