
ஆஸ்திரேலிய மகளிர் அணி அடுத்த மாதம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது மார்ச் 21ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்து டி20 தொடரில் பங்கேற்கும் 14 பேர் அடங்கிய ஆஸ்திரேலிய மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி தஹ்லியா மெக்ராத் தலைமையிலான இந்த அணியில் சில முக்கிய மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. அதில் மிக முக்கியாமானதாக அந்த அணியின் நட்சத்திர வீராங்கனை அலீசா ஹீலி தனது காயத்தில் இருந்து குணமடையாத காரணத்தால் இத்தொடரில் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அறிமுக வீராங்கனை நிக்கோல் ஃபால்டம் ஆஸ்திரேலிய டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் இந்த அணியின் துணைக்கேப்டனாக ஆஷ்லே கார்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதவிர்த்து எல்லிஸ் பெர்ரி, பெத் மூனி, அனபெல் சதர்லேண்ட் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களுடன், அலான கிங், கிம் கார்த், கிரேஸ் ஹாரிஸ், ஜார்ஜியா வோல் உள்ளிட்டோரும் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர்.