
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரில் இங்கிலாந்து மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸை மகளிர் அணியை வீழ்த்தி தொடரை வென்று அசத்தியுள்ளது.
இதனையடுத்து இங்கிலாந்து மகளிர் - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை (மே 30) முதல் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகாளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை டெர்பில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இங்கிலாந்து அணி டி20 தொடரை வென்றுள்ள நிலையில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் முயற்சியில் உள்ளது.
அதேசமயம் டி20 தொடரை இழந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி ஒருநாள் தொடரில் அதற்கான பதிலடியைக் கொடுக்க காத்திருக்கிறது. இதனால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அந்த அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீராங்கனையுமான ஹீதர் நைட் ஒருநாள் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.