ஐபிஎல் 2025: டெல்லி அணியின் பயிற்சியாளராக ஹேமங் பதானி நியமனம்?
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக தமிழகத்தை சேர்ந்த ஹேமங் பதானி நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், இத்தொடருக்கான வீரர்கள் மேகா ஏலம் இந்தாண்டு இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஐபிஎல் அணிகள் எந்தெந்த வீரர்களை தக்கவைக்கும் என்ற விவாதங்கள் எழத்தொடங்கியுள்ளன.
மேற்கொண்டு எதிர்வரும் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக ஐபிஎல் அணிகளில் எத்தனை வீரர்கள் தக்கவைக்கலாம் என்ற பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கேற்கும் அணிகளுக்கான கட்டுபாடுகள், விதிமுறைகள் மற்றும் ஏலத்தொகை உள்ளிட்ட அறிவிப்புகளை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தலா 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ளலாம் என்று கூறியது.
Trending
அதில் சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்களில் அதிகபட்சம் 5 பேரையும், அன்கேப்ட் வீரர்களில் அதிகபட்சம் 2 பேரையும் தக்க வைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களைத் தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேற்கொண்டு ஐபிஎல் அணிகளும் தங்கள் அணியை கட்டமைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வருவதுடன், அதற்கான வேலைகளிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்தவகையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது சமீபத்தில் தங்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ரிக்கி பாண்டிங்கை அணியில் இருந்து நீக்கியது. ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான்களில் ஒருவரான ரிக்கி பாண்டிங், கடந்த 2018ஆம் ஆண்டு முதல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக அங்கும் வகித்து வந்த நிலையில் தற்போது பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அந்த அணி ஐபிஎல் தொடருக்கு முன்னதாக தங்கள் அணியின் பயிற்சியாளரை தேடும் முயற்சியிலும் ஆர்வம் காட்டிவருகிறது. அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தலைமை பயிற்சியாளராக நியமிக்க ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் என்பது குறித்து தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதன்படி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் அடுத்த பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹேமங்க் பதானி நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கொண்டு அவருடன் இணைந்து வேனுகோபால் ராவ் ஆகியோரும் செயல்படவுள்ளதாக கூறப்பாகிறது. இதில் பதானி மற்றும் வேனுகோபால் இருவரும் இணைந்து ஐஎல்டி20, மேஜர் லீக் கிரிக்கெட் உள்ளிட்ட தொடர்களில் பணியாற்றியுள்ளனர்.
Also Read: Funding To Save Test Cricket
அதிலும் குறிப்பாக ஐஎல் எடி20 தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் உரிமையாளரின் அணியான துபாய் கேப்பிட்டல்ஸ் அணியிலும், மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் சியாட்டில் ஆர்காஸ் அணிலும் பணியாற்றினர். இதன் காரணமாகவே தற்போது ஹேமங் பதானி மற்றும் வேனுகோபால் ராவ் ஆகியோரைத் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பயிற்சியாளர் குழுவில் சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும் இதுகுறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now