
நேற்று இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக உலகக் கோப்பை தொடரில் 20 வருடங்களுக்குப் பிறகு வெற்றி பெற்று அசத்தியிருக்கிறது. இந்த வெற்றியை இந்திய அணிக்கு இந்த தொடரில் தொடர்ச்சியாக ஐந்தாவது வெற்றியாக பதிவாகியது. இதன் மூலமாக புள்ளிப்பட்டியலில் இந்திய அணி முதல் இடத்தை பிடித்திருக்கிறது.
லீக் சுற்றில் ஒன்பது ஆட்டங்களில் ஆறு ஆட்டங்கள் வெற்றி பெற்றால் ஒரு அணி அரையிறுதிக்குள் சென்று விடலாம். இந்த வகையில் தற்போது இந்திய அணி 5 வெற்றிகள் பெற்றிருக்கிறது. இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளை தவிர்த்து நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளுடன் இந்திய அணி விளையாட இருக்கிறது.
இந்த நான்கு ஆட்டங்களில் குறைந்தபட்சம் ஒரு ஆட்டத்தை வென்றால் கூட இந்திய அணி இறுதியில் இருக்கும் என்று சொல்லலாம். எனவே இந்திய அணி முதல் அணியாக அரையிறுதி வாய்ப்பை சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறுதி செய்து இருக்கிறது. நேற்றைய போட்டியில் எல்லா வீரர்களும் குறிப்பிட்ட அளவு பங்களிப்பை செய்து கொண்டே வர, முக்கியமான கட்டத்தில் இரண்டு ரன்களில் சூரியகுமார் ஆட்டம் இழந்ததும், போட்டியில் அழுத்தம் உருவானது.