
வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது வரும் ஜூலை 10ஆம் தேதி புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் இப்போட்டியுடன் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா, கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் யார் என்பது குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதுகுறித்து பேசிய பிரையன் லாரா, “இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜேம்ஸ் ஆன்டர்சன் சமகால கிரிக்கெட்டில் விளையாடும் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர். அவரது புள்ளிவிவரங்கள் அற்புதமானவை மற்றும் அவர் இங்கிலாந்துக்காக நிறைய செய்துள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது அவரது மனதில் இல்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவரது கேப்டன், பயிற்சியாளர் மற்றும் தேர்வாளர்கள் அப்படி நினைத்தால், அது அப்படியே இருக்கட்டும்.