மகளிர் டி20 உலகக்கோப்பை: மகளிர் மட்டுமே அடங்கிய நடுவர் குழுவை அறிவித்தது ஐசிசி!
2023 ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பைக்கான நடுவர்கள் குழுவை ஐசிசி அறிவித்துள்ளது. மேலும் கிரிக்கெட் வரலாற்றில் மகளிர் மட்டுமே அடங்கிய அதிகாரிகள் குழுவாகவும் இது அமைந்துள்ளது.
ஐசிசியின் 8ஆவது மகளிர் டி20 உலகக்கோப்பை தென் ஆப்பிரிக்காவில் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்குகிறது. பிப் 10 அன்று தொடங்கும் இந்த தொடரில் முதல் போட்டியில் போட்டி தொடரை நடத்தும் தென் ஆப்பிரிக்காவும், இலங்கையும் மோதுகின்றன.
இந்த தொடரில் பங்கேற்கும் நாடுகள் தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன. இந்திய அணி ஹர்மன்பிரீத கவுர் தலைமையில் பங்கேற்கிறது. இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் பிப்ரவரி 12ஆம் தேதி பாகிஸ்தானை சந்திக்கிறது.
Trending
இந்நிலையில் இத்தொடருக்கான நடுவர்கள் குழுவை ஐசிசி அறிவித்துள்ளது. இந்த தொடரில் 3 போட்டி நடுவர்களும், 10 கள நடுவர்கள் உட்பட 13 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த நடுவர்கள் குழுவில் இந்தியா சார்பாக 3 பேர் உள்ளனர். ஜிஎஸ் லெட்சுமி (போட்டி நடுவர்), விருந்தா ரதி, என் ஜனனி இவரும் கள நடுவர்களாக பணியாற்றவுள்ளனர்.
மேலும் கிரிக்கெட் தொடர் வரலாற்றில் முதல்முறையாக ஐசிசி நடத்தும் ஒரு தொடரை முழுவதுமாக மகளிர் மட்டுமே அடங்கிய நடுவர்கள் குழு செயல்படவுள்ளது.
இதுகுறித்து பேசிய ஐசிசியின் பொதுமேளாலர் வாசீம் கான், “மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான போட்டி அதிகாரிகள் குழுவை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மகளிர் கிரிக்கெட் சமீப ஆண்டுகளில் வேகமாக வளர்ந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அதிக மகளிர் உயர் மட்டத்தில் நடுவராக பணியாற்றுவதற்கான வாய்ப்பை உறுதி செய்வதற்கான பாதைகளை நாங்கள் உருவாக்கி வருகிறோம்.
இந்த அறிவிப்பு இந்த இடத்தில் எங்கள் நோக்கத்தின் பிரதிபலிப்பாகும், மேலும் எங்கள் விளையாட்டில் ஆண்களும் பெண்களும் ஒரே வாய்ப்புகளை அனுபவிக்கும் எங்கள் பயணத்தின் தொடக்கமாகும். எங்கள் பெண் போட்டி அதிகாரிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதற்கும், அவர்களின் திறமைகளை உலக அரங்கில் வெளிப்படுத்த வாய்ப்புகளை வழங்குவதற்கும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். தங்களுக்கு போட்டி சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை 2023 - க்கான நடுவர்கள் விவரம்
போட்டி நடுவர்கள்: ஜி.எஸ். லெட்சுமி (இந்தியா), ஷாண்ட்ரே பிரிட்ஸ் (தென் ஆப்பிரிக்கா), மிட்செல் பெரேரா (இலங்கை).
கள நடுவர்கள்: சூ ரெட்ப்பெர்ன் (இங்கிலாந்து), எலோயிஸ் ஷெரிடன் (ஆஸ்திரேலியா), கிளாரி பொலோசாக் (ஆஸ்திரேலியா), ஜாக்குலின் வில்லியம்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்), கிம் காட்டன் (நியூசிலாந்து), லாரன் ஏஜென்ஸ்பெர்க் (தென் ஆப்பிரிக்கா), அன்னா ஹாரிஸ் (இங்கிலாந்து), விருந்தா ரதி (இந்தியா), என். ஜனனி (இந்தியா), நிமாலி பெரேரா (இலங்கை).
Win Big, Make Your Cricket Tales Now