
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு விராட் கோலி - பில் சால்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். மும்பை இந்தியன்ஸ் தரப்பில் டிரென்ட் போல்ட் முதல் ஓவரை வீசிய நிலையில், அதனை எதிர்கொண்ட பில் சால்ட் முதல் பந்திலேயே அற்புதமான பவுண்டரியை விளாசி இன்னிங்ஸைத் தொடங்கினார். இதனால் இன்றைய ஆட்டத்தில் பில் சால்ட் ரன்களைக் குவிப்பார் என்ரு எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் டிரென்ட் போல்ட் அடுத்த பந்திலேயே ஒரு அபாரமான இன்ஸ்விங் யார்க்கரை வீசியதுடன் பில் சால்ட்டை க்ளீன் போல்டாக்கிய் தனது பதிலடியைக் கொடுத்தார். இதன் காரணமாக இப்போட்டியில் 4 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு பில் சால்ட் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இந்நிலையில் பில் சால்ட்டை க்ளீன் போல்டாக்கிய டிரென்ட் போல்ட்டின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Trent Boult CRAZY BOWLINGpic.twitter.com/hbHPs3ezX5
— Yash (@Yash22CS) April 7, 2025