
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது நாளை (மார்ச் 21) தொடங்கி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதில் நியூசிலாந்து மகளிர் மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயன முதல் டி20 போட்டியானது ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் நியூசிலாந்து மகளிர் அணி இலங்கை அணிக்கு எதிரான தொடரைக் கைப்பற்றிய கையோடும், ஆஸ்திரேலிய மகளிர் அணி இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை வென்ற கையோடு இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளன.
இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக பேசிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் தஹ்லியா மெக்ரா, “அணியை மீண்டும் வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்ததற்கு நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். துணை கேப்டன் ஆஷ்லே கார்ட்னருடன் ஆஷுடன் பணியாற்றுவதை நான் எப்போதும் ரசிக்கிறேன்.