
வரும் 30 ஆம் தேதி ஆசிய கோப்பை தொடர் தொடங்க இருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இணைந்து ஆசிய கோப்பை தொடரை நடத்துகின்றன. பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, நேபாள், வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய 6 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடுகின்றன.
ஏற்கனவே இந்தியா தவிர மற்ற அணிகள் தங்களது வீரர்களை அறிவித்த நிலையில், இந்தியா மட்டுமே வீரர்களை அறிவிக்காமல் இருந்தது. இந்த நிலையில், இன்று டெல்லியில் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், ராகுல் டிராவிட் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தலைமையில் மீட்டிங் நடந்தது. இதையடுத்து, பிற்பகல் 1.30 மணிக்கு இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த சந்திப்பின் போது ரோஹித் சர்மா பேசுகையில், “இந்திய அணியின் ஹர்திக் பாண்டியாவின் ரோலில் எந்த மாற்றமும் இல்லை. எப்போதும் போல் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டால், அணியின் பேலன்ஸ் சீராக இருக்கும். ஆசியக் கோப்பைத் தொடர் இலங்கையில் விளையாடப்பட உள்ளதால், எவ்வித சாதகமும் இந்திய அணிக்கு இல்லை. அதேபோல் அண்டர் டாக்ஸ் என்றும், கோப்பையை வெல்லும் அணி என்றும் யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது.