
நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 31ஆம் தேதி முதல் தொடங்கி மே 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கேற்றார் போல அணிகளுடைய சொந்த மைதானங்களில் இத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து அணிகளும் தங்களது ஹோம் மைதானங்களில் பயிற்சியை தொடங்கிவிட்டன. இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் வீரர்களை தவிர அனைத்து வீரர்களும் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த முறை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு தான் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வெற்றிகரமான கேப்டனாக இருந்து வந்த ரிஷப் பந்த் விபத்து காரணமாக விளையாட முடியாத சூழலில் இருக்கிறார். டேவிட் வார்னர் அடுத்த கேப்டனாக செயல்படுவார் எனத்தெரிகிறது. எனினும் மிடில் ஆர்டரில் எப்படி பந்த்தை போன்ற ஒரு வீரரின் இடத்தை நிரப்பப்போகிறார்கள் என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் அக்ஷரை வைத்து திட்டம் தீட்டியுள்ளார் தலைமை பயிற்சியாளர் ரிக்கிப் பாண்டிங்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், “அக்ஷர் பட்டேலை எனக்கு நீண்ட வருடங்களாக தெரியும். மும்பை அணியில் சிறு பையனாக இருந்த போது இருந்தே பார்த்து வருகிறேன். கடந்த 2 வருடங்களாக அக்ஷர் பட்டேலின் பேட்டிங் திறமை வேற லெவலிற்கு சென்றுள்ளது. ஆனால் இத்தனை நாட்களாக ஐபிஎல் மற்றும் சர்வதேச போட்டிகளில் வெளிகாட்டாமல் இருந்து வந்துள்ளார். மேலும் சில மாற்றங்களை மட்டும் செய்தால் மிகச்சிறப்பாக விளையாடுவார்.