
17ஆவது சீசன் ஐபிஎல் தொடர் நாளை முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியிலேயே ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் சேப்பாக்கிலுள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் சென்னை அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சென்னை அணியின் மிகவும் முக்கியமான பந்து வீச்சாளர்களில் ஒருவரான மதீஷா பதிரானா இந்த சீசனின் தொடக்க போட்டிகளில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் சென்னை அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேச அணிக்கு எதிரான தொடரின்போது பதிரானாவுக்கு காயம் ஏற்பட்டது. இந்த காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக பதிரானா குணமடையாததால், ஐபிஎல் தொடரின் தொடக்க போட்டிகளில் விளையாட முடியாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தொடரின் ஆரம்பத்திலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.