
பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது இன்று தொடங்கிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்றது.
இப்போட்டிய டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்களில் 203 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் முகமது ரிஸ்வான் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 44 ரன்களையும், இறுதிவரை போராடிய நசீம் ஷா அதிகபட்சமாக ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 40 ரன்களையும் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் ஆடம் ஸாம்பா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதன்பின் 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் மேத்யூ ஷார்ட் ஒரு ரன்னிலும், ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 16 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். அதான்பின் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் 44 ரன்களிலும், ஜோஷ் இங்லிஷ் 49 ரன்களிலும் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய லபுஷாக்னே, ஆரோன் ஹார்டி, கிளென் மேக்ஸ்வெல், சீன் அபோட் உளிட்டோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.