
ரோஹித் சர்மா தலைமையிலான் இந்திய அணியானது நாளை நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது நியூயார்க்கில் உள்ள நசாப் கவுண்டி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
முன்னதாக நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பெருவார்கள் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது. அதிலும் குறிப்பாக சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்குமா என்ற கேள்விகளும் எழுந்து வந்தன. அதேசமயம் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சனுக்கு முதல் முறையாக டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் தேர்வு செய்யப்பட்டது குறித்து பேசிய சஞ்சு சாம்சன், “உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க தயாரான அல்லது அனுபவம் வாய்ந்த சஞ்சு சாம்சனாக இப்போது என்னை நினைக்கிறேன். ஏனெனில் கடந்த 10ஆண்டுகளாக நான் நிறைய தோல்விகளையும், அதில் ஒருசில வெற்றிகளையும் பெற்றுள்ளேன். இந்த தொடருக்கு முன்னதாக வாழ்க்கையும் கிரிக்கெட்டும் எனக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்துள்ளன.