
பயிற்சிக்கு திரும்பிய பும்ரா; ரசிகர்கள் மகிழ்ச்சி! (Image Source: Google)
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா. இவர் கடந்த 2016 முதல் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை, 30 டெஸ்ட், 72 ஒருநாள் மற்றும் 60 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி மொத்தம் 319 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருந்தார்.
அதன் பிறகு முதுகு வலி காரணமாக அவர் இந்திய அணிக்காக விளையாடவில்லை. மேலும் ஐபிஎல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட தொடர்களிலும் ஜஸ்ப்ரீத் பும்ரா காயம் காரணமாக விலகியிருந்தார். இந்நிலையில் அவர் தற்போது தேசிய கிரிக்கெட் அகாதமியில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.