
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றிபெற்று அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களுடைய 8ஆவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 17 புள்ளிகளைப் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதிசெய்து அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹர்பிரீத் பிரார் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இப்போட்டி முடிந்து பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், “நேற்று பயிற்சி செய்யும் போது எனக்கு அடிபட்டது, நான் சென்று இங்கே என்ன பிரச்சினை என்று பார்க்க வேண்டும். நான் எல்லா வீரர்களுக்கும் ஒரு நேர்மறையான உடல் மொழியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற செய்தியை அனுப்பினேன், நீங்கள் தடுமாறி ஆட்டம் உங்களிடமிருந்து விலகிவிட்டதாக உணருவீர்கள், ஆனால் இந்த வகையான சிறந்த மற்றும் துணிச்சலான அணுகுமுறையைக் காட்டும் ஒவ்வொரு வீரரையும் நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.