
இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் சூர்யகுமார் சதம் விளாசி ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார். இதனை தொடர்ந்து ஆட்டம் முடிந்த உடன் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சூர்யகுமாரை நேர்காணல் செய்தார். கல்லூரி காலத்தில் நமக்கு பிடித்த பேராசிரியர், நம்முடன் ஜாலியாக உரையாடினால் எப்படி இருக்குமோ, அதே போல் இந்த நேர்காணல் அமைந்தது. நேர்காணலை தொடங்கும் போதே சூர்யகுமார் அவருடைய சிறு வயதில் என்னுடைய பேட்டிங்கை பார்த்திருக்க மாட்டார். அதனால் தான் இப்படி அதிரடியாக விளையாடுகிறார் என்று டிராவிட் கிண்டல் செய்தார்.
அதற்கு சூர்யகுமார் யாதவ், நிச்சயமாக உங்களுடைய பேட்டிங்கை பார்த்து தான் வளர்ஙநதேன் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய டிராவிட், ஒவ்வொரு முறையும் நாங்கள் பார்த்ததிலேயே இது தான் சிறந்த டி20 இன்னிங்ஸ் என்று நினைப்போம். ஆனால், அதன் பிறகும் எப்படி அதனை விட சிறந்த இன்னிங்சை விளையாடி எங்களை ஆச்சரியப்படுத்துகிறீர்கள் என்று கேட்ட டிராவிட், உங்களுடைய டாப் இன்னிங்ஸ் என்றால் எதை சொல்வீர்கள் என்றார்.
அதற்கு பதில் அளித்த சூர்யகுமார், “ஒவ்வொரு முறையும் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் செய்ய களத்திற்கு செல்வதை விரும்புகிறேன். அனைத்து இன்னிங்சையும் ஒரே மாதிரியாக தான் விளையாடுகிறேன். இதில் எது பெஸ்ட் என்று கூறுவது சிரமம். பயிற்சி செய்யும் போது, மனதிற்குள் ஃபில்டர்கள் நிற்பதை போல் நினைத்து பயிற்சி செய்வேன்.