நான் எங்கு நிற்கிறேன் என்பது இப்போது எனக்கு தெரிந்துள்ளது - மார்கஸ் ஹாரிஸ்!
இனி என்னை தேர்வு செய்ய வேண்டுமா அல்லது ஸ்பெஷலிஸ்ட் தொடக்க வீரரை தேர்வு செய்ய வேண்டுமா என்பது தேர்வாளர்களின் முடிவில் தான் உள்ளது என ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் டேவிட் வார்னர் சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். இதனால் அவரது தொடக்க வீரர் இடத்தில் யார் களமிறங்குவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. அதற்கான போட்டியில் மார்கஸ் ஹாரிஸ், கேமரூன் க்ரீன், கேமரூன் பான்கிராஃப், மேத்யூ ரென்ஷா உள்ளிட்ட தொடக்க வீரர்கள் இருந்தனர்.
ஆனால் யாரும் எதிர்பாரத விதமாக நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரராக களமிறங்குவார் என்ற செதிகள் வெளிவந்தன. அதற்கேற்றது போலவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தொடக்க வீரராக களமிறங்கினார். அதேசமயம் கேமரூன் க்ரீன் நான்காவது இடத்தில் விளையாடினார். இதனால் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் புதிய தொடக்க வீரராக ஸ்டீவ் ஸ்மித் இனி வரும் போட்டிகளில் பங்கேற்பார் என்பது உறுதியாகியுள்ளது.
Trending
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்படாதது குறித்து, தொடக்க வீரர் இடம் குறித்து மார்கஸ் ஹாரிஸ் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஆஷஸ் தொடரின் போதே டேவிட் வார்னர் எப்போது ஓய்வை அறிவிக்கவுள்ளா என்பது எங்களுக்கு தெரியும். இதனால் அவரின் ஓய்வு பிறகு அணியின் தொடக்க வீரராக யார் களமிறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்திருந்தது. அந்த போட்டியில் நானும் ஒருவனாக இருந்தேன்.
ஆனால் இப்போது அணியின் தொடக்க வீரர் யார் என்பது முடிவுசெய்யப்பட்டுள்ளது. அதனால் அதுகுறித்து நான் கவலைப்பட வேண்டிய தேவை இல்லை. இதனால் நான் தெரியாதவர்களுடன் சண்டையிடுவதற்கு பதிலாக நான் எங்கு நிற்கிறேன் என்பது இப்போது எனக்கு தெரிந்துள்ளது. அதனால் நான் இங்கு தேர்வாளர்களின் தேர்வு குறித்து அதிகம் சிந்திக்க வேண்டிய அவசியமில்லை.
ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உள்ளது. ஆனால் இனியும் தேர்வாளர்கள் ஒரு ஸ்பெஷலிஸ்ட் தொடக்க வீரரை அணியில் சேர்ப்பார்களா இல்லை என்பது தான் தெரியவில்லை. அவர்களுடைய நிலைப்பாடு குறித்து எனக்கு கவலை உள்ளது தான், ஆனாலும் நிலமைகள் கூடிய விரைவில் மாறலாம். அதனால் நான் எப்போதும் போல் என்னுடையை வேலையை சிறப்பாக செய்ய முயற்சிக்கவுள்ளனே. ஆனால் இனி என்னை தேர்வு செய்ய வேண்டுமா அல்லது ஸ்பெஷலிஸ்ட் தொடக்க வீரரை தேர்வு செய்ய வேண்டுமா என்பது தேர்வாளர்களின் முடிவில் தான் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மார்கஸ் ஹாரிஸ் மூன்று அரைசதங்களுடன், 607 ரன்களை எடுத்துள்ளார். முன்னதாக டெஸ்ட் போட்டிகளில் நான் களமிறங்கி வந்த தொடக்க ஆட்டக்காரர் இடத்தில் மார்கஸ் ஹாரிஸ் இனி விளையாடுவார் என்று டேவிட் வார்னர் தனது ஓய்வு முன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now