டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியை விட சாதித்தவர்கள் யாரும் இல்லை - மைக்கேல் வாகன்!
விராட் கோலி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் டெஸ்ட் கிரிக்கெட் அதன் கவர்ச்சியை இழந்திருக்கும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறிவுள்ளார்.

இந்திய அணி எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதிலும் விராட் கோலி போன்ற அனுபவம் வாய்ந்த வீரர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வை அறிவித்துள்ளது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதனால் எதிவரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரது இடங்களை யார் நிரப்புவார்கள், இந்திய அணியின் கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்விகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், விராட் கோலி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் டெஸ்ட் கிரிக்கெட் அதன் கவர்ச்சியை இழந்திருக்கும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறிவுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “30 ஆண்டுகளுக்கும் மேலாக, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு விராட் கோலியை விட அதிகமாக சாதித்த ஒருவர் இல்லை என்று நான் நம்புகிறேன். ஒரு தசாப்தத்திற்கு முன்பு அவர் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது, இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆர்வத்தை இழந்துவிடுமோ என்று நான் கவலைப்பட்டேன். ஏனெனில் தோனி சிறந்த வெள்ளை பந்து வீரர்களில் ஒருவர், ஆனால் அவர் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்தபோது, அந்த வடிவத்தை விரும்பாத ஒரு அணியைப் போல உணர்ந்தேன்.
டெஸ்ட் கிரிக்கெட்டை இந்தியா வெறித்தனமாக நேசிக்க வேண்டும் என்பது விளையாட்டுக்குத் தேவை, அதைத்தான் விராட் கேப்டனாக வளர்த்தார். அவரது ஆர்வம், திறமை மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் எப்போதும் உச்சத்தில் இருக்கும் என்று அவர் பேசிய விதம் சிறப்பாக இருந்தது . அவர் இல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் மந்தமான இடமாக இருந்திருக்கும், மேலும் அவர் அதில் அவ்வளவு ஆர்வம் காட்டி முதலீடு செய்திருக்காவிட்டால் அது அதன் ஈர்ப்பை இழந்திருக்கவும் வாய்ப்பு உள்ளது” என்று கூறிவுள்ளார்.
Also Read: LIVE Cricket Score
விராட் கோலி இந்திய அணிக்காக இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 46.85 சராசரியாக 9230 ரன்களை எடுத்துள்ளார். இதில் அவர் 30 சதங்களையும், 31 அரைசதங்களையும் அடித்துள்ளார். மேற்கொண்டு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக 68 போட்டிகளில் செயல்பட்டுள்ள அவர் 40 முறை அணியை வெற்றிப்பாதைக்கும் அழைத்துச் சென்று, மிகச்சிறந்த டெஸ்ட் கேப்டன்களில் ஒருவராகவும் திகழ்ந்தார் என்பது குறிப்பிடாத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now