
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதில் முதல் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்து இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றிய நிலையில் மூன்றாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் குவின்டன் டி காக் 68 ரன்களும், ரூஸோவ் 48 பந்துகளில் 7 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் உட்பட 100 ரன்களும் எடுத்தனர். ஸ்டப்ஸ் 23, மில்லர் 19 ஆகியோர் ஓரளவுக்கு ரன்களை சேர்த்ததால், 20 ஓவர்களில் அந்த அணி 227 ரன்களை குவித்து அசத்தியது.
அதன்பின் இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் 46, தீபக் சஹார் 31, ரிஷப் பந்த் 27 ஆகியோர் சிறப்பாக விளையாடிய நிலையில் ரோஹித் 0, ஷ்ரேயஸ் ஐயர் 1, சூர்யகுமார் யாதவ் 8 போன்றவர்கள் படுமோசமாக சொதப்பினார்கள்.