இந்த போட்டியில் 10-15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம் - அக்ஸர் படேல்!
முதல் இன்னிங்ஸில் விக்கெட் சற்று கடினமாக இருந்தது என்று நினைத்தேன், ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் பனியின் தாக்கம் இருந்ததால் பேட்டிங் செய்ய அது எளிதாக மாறிவிட்டது என்று அக்ஸர் படேல் தெரிவித்துள்ளார்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் பெரிதளவி ரன்களைச் சேர்க்க முடியாமல் விக்கெட்டை இழந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக கேஎல் ராகுல் 41 ரன்களையும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 34 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆர்சிபி தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Also Read
இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில், விராட் கோலி மற்றும் குர்னால் பாண்டியா இணை அதிரடியாக விளையாடி அரைசதங்களை கடந்ததுடன் 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதில் விராட் கோலி 51 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை களத்தில் இருந்த குர்னால் பாண்டியா 73 ரன்களையும், டிம் டேவிட் 19 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18.3 பந்துகளில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. மேலும் இந்த வெற்றியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியளில் முதலிடத்திற்கு முன்னேறிய நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 12 புள்ளிகளுடன் 4ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் இப்போட்டியில் குர்னால் பாண்டியா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்த தோல்வி குறித்து பேசிய அக்ஸர் படேல், “நாங்கள் இந்த போட்டியில் 10-15 ரன்கள் குறைவாக இருந்ததாக நான் நினைக்கிறேன். முதல் இன்னிங்ஸில் விக்கெட் சற்று கடினமாக இருந்தது என்று நினைத்தேன், ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் பனியின் தாக்கம் இருந்ததால் பேட்டிங் செய்ய அது எளிதாக மாறிவிட்டது. மேலும் சில கேட்சுகளை நாங்கள் தவறவிட்டோம், அந்த கேட்சுகளை எடுக்க வேண்டும். நாங்கள் வேறு எதையும் செய்திருக்க முடியாது என்று நாங்கள் நினைக்கிறோம்.
Also Read: LIVE Cricket Score
நாங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து கொண்டிருந்தோம். ஒரு பேட்டர் நடுவில் சிறிது நேரம் செலவிட்டிருந்தால், அவர் வேகத்தை அதிகரித்திருக்கலாம். நாங்கள் கூடுதலாக 10-15 ரன்கள் எடுத்திருக்கலாம். கேஎல் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார், அதனால் நான் அவரை 4ஆவது இடத்தில் வைக்க விரும்பினேன். மேலும் இந்த மைதானத்தின் ஒரு பக்க பவுண்டரி எல்லை குறைவாக இருந்ததன் காரண்மாக அவரை 4வது இடத்தில் அனுப்பினோம்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now