
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் கடந்த சீசன் இந்தியாவில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. அதன்படி இத்தொடரின் இறுதிப்போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியானது, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை வீழ்த்தி 6ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. அதேசமயம் லீக் தொடரில் அபாரமாக செயல்பட்ட இந்திய அணியானது மீண்டும் ஒருமுறை கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்து ரசிகர்களின் இதயத்தை நொருக்கியது.
இத்தொடரின் போது இந்திய அணியின் ஆல் ரவுண்டார் ஹர்திக் பாண்டியா காயமடைந்தார். வங்கதேச அணிக்கு எதிராக புனேவில் நடைபெற்ற போட்டியில் ஹர்திக் பாண்டியாவிற்கு காலில் காயம் ஏற்பட்டது. அதன்பின் அவருக்கு மேற்கொள்ளபட்ட மருத்துவ பரிசோதனை முடிவில் அவரது காயம் தீவிரமடைவே உலகக்கோப்பை தொடரின் பாதியிலேயே விலகினார். அதன்பின் தனது காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த அவர், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட தொடர்களிலிருந்தும் விலகினார்.
இதையடுத்து தற்போது காயத்திலிருந்து மீண்டுள்ள ஹர்த்திக் பாண்டியா வரவுள்ள ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவதும் அணியின் கேப்டனாக செயல்படவுள்ளார். இதன் காரணமாக அவர் ஐபிஎல் தொடரில் விளையாட தீவிரமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் ஏற்பட்ட காயம் குறித்தும், அதற்காக மேற்கொண்ட சிகிச்சைகள் குறித்தும் ஹர்திக் பாண்டியா மனம் திறந்து பேசியுள்ளார்.