Hardik pandya injury update
ஐந்து நாள் ஓய்வு மூன்று மாத ஓய்வாக மாறிவிட்டது - ஹர்திக் பாண்டியா!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் கடந்த சீசன் இந்தியாவில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. அதன்படி இத்தொடரின் இறுதிப்போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியானது, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை வீழ்த்தி 6ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. அதேசமயம் லீக் தொடரில் அபாரமாக செயல்பட்ட இந்திய அணியானது மீண்டும் ஒருமுறை கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்து ரசிகர்களின் இதயத்தை நொருக்கியது.
இத்தொடரின் போது இந்திய அணியின் ஆல் ரவுண்டார் ஹர்திக் பாண்டியா காயமடைந்தார். வங்கதேச அணிக்கு எதிராக புனேவில் நடைபெற்ற போட்டியில் ஹர்திக் பாண்டியாவிற்கு காலில் காயம் ஏற்பட்டது. அதன்பின் அவருக்கு மேற்கொள்ளபட்ட மருத்துவ பரிசோதனை முடிவில் அவரது காயம் தீவிரமடைவே உலகக்கோப்பை தொடரின் பாதியிலேயே விலகினார். அதன்பின் தனது காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த அவர், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட தொடர்களிலிருந்தும் விலகினார்.
Related Cricket News on Hardik pandya injury update
-
ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகும் ஹர்திக் பாண்டியா; சிக்கலில் மும்பை இந்தியன்ஸ்!
ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் போது ஏற்பட்ட கணுக்கால் காயம் காரணமாக 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: தொடரிலிருந்து விலகிய ஹர்திக் பாண்டியா; பிரஷித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு!
சிகிச்சை முடிந்து அரை இறுதிச் சுற்றுக்கு முன் ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு திரும்புவார் என கூறப்பட்ட நிலையில், அவர் உலகக்கோப்பை தொடரில் இருந்தே விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
ஹர்திக் பாண்டியாவின் காயம் குறித்து அப்டேட் வழங்கிய பிசிசிஐ!
வங்கதேச அணிக்கெதிரான போட்டியின் போது காயமடைந்த ஹர்திக் பாண்டியாவின் உடல்நிலை குறித்து பிசிசிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47