
இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்றுடன் முடிவடைந்தது . இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 76 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இன்றைய நாளை துவங்கிய ஆஸ்திரேலியா ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே உஸ்மான் கவஜாவின் விக்கெட்டை ரவிச்சந்திரன் அஸ்வின் வீழ்த்தினார்,இருந்த போதிலும் டிராவஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லபுஷேன் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியாக ஆடி ஆஸ்திரேலியா அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்ஸில் எட்டு விக்கெட்டுகளையும் வீழ்த்திய நேதன் லியான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்தப் போட்டி குறித்து பரிசளிப்பு விழாவின் போது பேசிய நாதன் லையன், “இது ஒரு மறக்க முடியாத டெஸ்ட் போட்டி வெற்றி. இங்கு வந்து இதுபோன்று ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தியது நிச்சயமாக ஒரு பெருமையான தருணம். மேலும் எங்களது இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது மிகவும் ஸ்பெஷலான தருணம்.