
இந்தியா வந்துள்ள இலங்கை அணி முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடியது.இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் கடுமையாக போராடிய நிலையில் முதல் போட்டியில் இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்திலும் த்ரில் வெற்றியை பெற்றன.
இதனைத் தொடர்ந்து மூன்றாவது டி20 போட்டி ராஜ்கோட்டில் துவங்கி நடைபெற்ற நிலையில், அதில் சூர்யகுமார் யாதவ் அதிரடி சதம் விளாசி அணி 200+ ரன்களை கடப்பதை உறுதி செய்தார். இறுதியில் இந்தியா மெகா வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நாளை முதல் துவங்கி நடைபெறவுள்ளது.
மூன்று ஒருநாள் போட்டிகளும் ஜனவரி 10, 12, 15 ஆகிய தேதிகளில் கௌகாத்தி, கொல்கத்தா, திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது. போட்டிகள் அனைத்தும் மதியம் 1:30 மணிக்கு நடைபெறும். இத்தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும் இத்தொடருக்கான இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளனர்.