இந்த போட்டியில் பெரிய ஸ்கோர் அடிக்க விரும்பினேன் - ஷுப்மன் கில்!
இந்த போட்டியில் பெரிய ஸ்கோர் அடிக்க விரும்பினேன். ஆனால் என்னால் அது முடியாமல் போனது. இருந்தாலும் இறுதியில் இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி என ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இஷான் கிஷன், ஷுப்மன் கில், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா ஆகியோரது அரைசதத்தின் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 351 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் இந்தியாவின் ஷர்துல் தாக்கூர், முகேஷ் குமார் ஆகியோரது பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 151 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளையும், முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் விண்டீஸை வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.
Trending
இப்போட்டியில் 85 ரன்களை எடுத்திருந்த ஷுப்மன் கில் ஆட்டநாயகனாகவும், இஷான் கிஷன் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். போட்டி முடிவுக்கு பின் பேசிய ஷுப்மன் கில், “இந்த இன்னிங்ஸ் எனக்கு ஸ்பெஷலான ஒன்று. நான் இந்த போட்டியில் பெரிய ஸ்கோர் அடிக்க விரும்பினேன். ஆனால் என்னால் அது முடியாமல் போனது. இருந்தாலும் இறுதியில் இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. இந்த மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது.
அதோடு துவக்கத்தில் பந்து நன்றாக பேட்டுக்கு வந்ததால் நல்ல ஷாட்களை விளையாட முடிந்தது. ஆனால் பந்து சற்று பழையதாக ஆன பிறகு சற்று சவாலாக இருந்தது. கடந்த போட்டியின் போது நான் பெரிய அளவில் ரன்களை குவிக்காததால் இந்த போட்டியில் பெரிய அளவில் ரன்களை குவிக்க வேண்டும் என்று நினைத்தே விளையாடினேன். இந்த போட்டியில் என்னுடைய பெஸ்ட்டை வழங்கியதாகவே நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now