Advertisement

ரோஹித், விராட் ஆகியோருடன் நிறைய கற்றுக் கொண்டேன் - யஷஸ்வி ஜெய்ஸ்வால்!

இந்தப் பயணத்தில் அனைவருக்கும் மற்றும் மூத்த வீரர்களுக்கும் நான் நன்றி சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ரோஹித் மற்றும் விராட் ஆகியோருடன் நான் பேசி நிறைய கற்றுக் கொண்டேன் என இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். 

Advertisement
ரோஹித், விராட் ஆகியோருடன் நிறைய கற்றுக் கொண்டேன் - யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
ரோஹித், விராட் ஆகியோருடன் நிறைய கற்றுக் கொண்டேன் - யஷஸ்வி ஜெய்ஸ்வால்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 15, 2023 • 12:12 PM

இந்திய அணியின் தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி வெஸ்ட் இண்டீஸ் அணியை 141 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 150 ரன்கள் எடுத்து சுருண்டது. அந்த அணியின் அறிமுக வீரர் அலிக் அதனஸ் மற்றும் தாக்குப்பிடித்து 47 ரன்கள் எடுத்தார். ரவிச்சந்திரன் அஸ்வின் ஐந்து விக்கட்டுகள் கைப்பற்றினார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
July 15, 2023 • 12:12 PM

அடுத்து விளையாடிய இந்திய அணிக்கு துவக்க வீரராக களம் இறங்கிய அறிமுக வீரர் ஜெய்ஸ்வால் மிகச் சிறப்பாக விளையாடி 171 ரன்கள் எடுத்தார். டெஸ்ட் அறிமுகத்தில் சதம் அடித்த 17 வது இந்திய வீரராக தன் பெயரை பதிவு செய்தார். மேலும் வெளிநாட்டு மண்ணில் துவக்க விக்கட்டுக்கு அதிக பார்ட்னர்ஷிப் சேர்த்தவராகவும் தன் பெயரை பதிவு செய்தார். இது மட்டும் அல்லாமல் அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிக பந்துகளை எதிர்கொண்ட இந்திய வீரராகவும் தனி சாதனையைப் படைத்தார்.

Trending

இதற்கு அடுத்து இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 421 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 130 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி மீண்டும் அதற்கு அளித்தது. ரவிச்சந்திரன் அஸ்வின் ஏழு விக்கெட்டுகள் மீண்டும் வீழ்த்தினார். இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் மோசமாக விளையாடிய புஜாரா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வாய்ப்பு தரப்பட்ட ஜெய்ஸ்வால் தன்னை முதல் போட்டியில் நிரூபித்த விதம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. அவர் பேட்டிங் டெக்னிக் குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் அவருக்கே ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

ஆட்டநாயகன் விருது பெற்ற ஜெய்ஸ்வால் பேசுகையில் “நாங்கள் நல்ல செஷனில் இருந்தோம். நான் டிராவிட் சாரிடம் நிறைய பேசினேன். அவர் எனக்கு நம்பிக்கையை கொடுத்தார். தேர்வு குழுவினர் மற்றும் என் மீது நம்பிக்கை வைத்து என்னை வெளிப்படுத்த அனுமதித்ததற்காக ரோஹித் பாய்க்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். நான் எதற்காக உழைத்து வருகிறேன்? நான் எனது ஒழுக்கம் மற்றும் செயல்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். 

இந்தியாவுக்காக டெஸ்ட் விளையாடுவது ஒரு விசேஷமான தருணம். நான் சிறுவயதில் நாட்டிற்காக விளையாடுவது பற்றி சிந்தித்தேன். எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம் இது. ஆனால் இது எனக்கு ஆரம்பம்தான். இந்தப் பயணத்தில் அனைவருக்கும் மற்றும் மூத்த வீரர்களுக்கும் நான் நன்றி சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ரோஹித் மற்றும் விராட் ஆகியோருடன் நான் பேசி நிறைய கற்றுக் கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement