
தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ஓட்டம் மிகப் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த இறுதிப் போட்டிக்கான வாய்ப்பில் இந்தியா ஆஸ்திரேலியா தென் ஆபிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் தற்போது நீடிக்கின்றன. ஆஸ்திரேலியா அணி இந்த வாய்ப்பில் முதல் இடத்திலும் இந்திய அணி இரண்டாவது இடத்திலும் தென் ஆப்பிரிக்க அணி மூன்றாவது இடத்திலும் அடுத்து நியூசிலாந்து அணியும் இருக்கின்றது.
இந்த நிலையில் அடுத்த மாதம் பார்டர் கவாஸ்கர் டிராபி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட ஆஸ்திரேலியா அணி இந்தியா வரவிருப்பது இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் மிகப் பரபரப்பான ஒரு தொடராக அமைய இருக்கிறது.
தற்பொழுது ஆஸ்திரேலியா அணி உள்நாட்டில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்னாபிரிக்க அணியை எதிர்த்து விளையாடி 2-0 எனத் தொடரை வென்றது. இந்தத் தொடரை முழுமையாகக் கைப்பற்றி இருந்தால் ஆஸ்திரேலியா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கும். அந்த வாய்ப்பு நூலிலையில் தவறி போயிருக்கிறது.