
இந்தியாவில் நடைபெறும் ஐசிசி உலக கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு உலகின் அனைத்து முன்னணி வீரர்களும் தயாராக உள்ளனர். அந்த வரிசையில் சொந்த மண்ணில் 2011 போல கோப்பையை வென்று சொந்த ரசிகர்களின் நீண்ட கால தாகத்தை தணிப்பதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் கிட்டத்தட்ட அனைவருமே நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள்.
அதில் பேட்டிங் துறையில் விராட் கோலி, ஷுப்மன் கில், கேஎல் ராகுல் ஆகியோரை காட்டிலும் இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ரசிகர்களின் மிகப்பெரிய நம்பிக்கையாக இருக்கிறார் என்றால் மிகையாகாது. ஏனெனில் கடந்த 15 வருடங்களாக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடி வரும் அவர் சச்சினையே மிஞ்சி அதிவேகமாக 10,000 ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்து 47 சதங்கள் விளாசி நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்.
மேலும் சேசிங் செய்வதிலும் சரி 2022 டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான அழுத்தமான போட்டிகளிலும் சரி எப்போதுமே அவர் எதிரணிக்கும் இந்தியாவின் வெற்றிக்கும் குறுக்கே நிற்பவராக இருக்கிறார் என்று சொல்லலாம். இந்நிலையில் சச்சினுக்கு நிகரான அந்தஸ்தை கொண்டுள்ள விராட் கோலி இம்முறை அதிக ரன்கள் குவித்து இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்று வீரேந்திர சேவாக் கோரிக்கை வைத்துள்ளார்.