
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ருத்துராஜ் கெய்க்வாட் (57), கான்வே (47), சிவம் துபே (27) மற்றும் அம்பத்தி ராயூடு (27*) ஆகியோர் தங்களத் பங்களிப்பை சரியாக செய்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது.
இதன்பின் 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்தி களமிறங்கிய லக்னோ அணிக்கு அந்த அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல் ராகுல் மற்றும் கெய்ல் மெயர்ஸ் ஆகியோர் அதிரடி துவக்கம் கொடுத்து முதல் விக்கெட்டிற்கே 6 ஓவர்களுக்குள் 79 ரன்கள் எடுத்து கொடுத்தனர். போட்டியின் 6வது ஓவரில் கே.எல் ராகுலின் விக்கெட்டை எடுத்த மொய்ன் அலி போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.