
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகள் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகின்றன . மார்ச் 31ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வருகின்ற மே மாதம் 28ஆம் தேதி முடிவடைய இருக்கிறது . இதனைத் தொடர்ந்து இந்திய அணி இங்கிலாந்து சென்று ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறது . இந்தப் போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் ஜூன் மாதம் ஏழாம் தேதி துவங்கி பதினொன்றாம் தேதி வரை நடைபெற இருக்கிறது .
இந்தப் போட்டி தொடர்களில் பங்கேற்கும் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணி வீரர்களின் விவரங்கள் இரண்டு அணியின் கிரிக்கெட் நிர்வாகத்தால் ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டன . இந்திய அணியின் முன்னணி வீரரான அஜிங்கியா ரஹானே நீண்ட நாட்களுக்குப் பிறகு அணிக்கு மீண்டும் திரும்பி இருக்கிறார் .
இந்நிலையில் இந்திய அணியின் தேர்வு மற்றும் வெற்றிக்கான வாய்ப்புகள் குறித்து கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும் வர்ணணையாளருமான ரவி சாஸ்திரி தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார் . மேலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் தன்னுடைய பணிக்காலத்தில் நடைபெற்ற சில விஷயங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார் .