ஆஷாஸ் தொடரை ஆஸ்திரேலிய அணி 5-0 என கைப்பற்றும் - கிளென் மெக்ராத்!
இந்திய அணியின் இந்தத் தோல்வி குறித்து நான் கவலைப்பட மாட்டேன் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் கிளென் மெக்ராத் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் வைத்து நடத்தப்பட்ட இரண்டாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றியது! நடைபெற்று முடிந்த இந்தப் போட்டியில் இந்திய அணி தனது தரத்திற்கான போராட்டத்தை வெளிப்படுத்தாமல், மிக எளிதாக ஆஸ்திரேலிய அணியிடம் சரணடைந்து தோற்றது, பெரிய விமர்சனம் ஆகி வருகிறது.
மேலும் சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து இங்கிலாந்தில் இருந்து, அடுத்து நடைபெறவிருக்கிற ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாட இருக்கிறது. கிரிக்கெட் உலகில் மிகவும் புகழ்பெற்ற ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி வருகின்ற 16ஆம் தேதி துவங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Trending
இந்திய அணியின் தோல்வி குறித்தும் ஆஷஸ் தொடர் குறித்தும் பேசிய ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் கிளன் மெக்ரத், “இந்திய அணி தோற்றது போல சில நேரங்களில் நடக்கும். இங்கிலாந்து நிலைமைகள் இந்தியாவில் கிரிக்கெட் விளையாடுவதை விட வித்தியாசமாக இருக்கும். இதை ட்ரெஸ்ஸிங் ரூம் பிரஷர் என்பார்கள். இரு அணிகளுமே சமீபத்தில் நிறைய போட்டிகளில் விளையாடவில்லை.
கடைசி நாளில் கொஞ்சம் முன்னேறி போக ரஹானே மற்றும் விராட் கோலி இடம் ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது. ஆனால் ஆரம்பத்திலேயே விக்கெட் போகிறது. அங்கிருந்து சரிவுதான் உண்டாகும். மேலும் இது ஒரே ஒரு டெஸ்ட் போட்டி எனவே இப்படி நடக்கலாம். எனவே இந்திய அணியின் இந்தத் தோல்வி குறித்து நான் கவலைப்பட மாட்டேன். நடைபெற இருக்கும் ஆஷாஸ் தொடரை ஆஸ்திரேலிய அணி முழுமையாக 5-0 என கைப்பற்றும்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now