
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. மேலும் இத்தொடருக்காக பங்கேற்கும் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
மேற்கொண்டு இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. அந்தவகையில் பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியில் கேப்டனாக ரோஹித் சர்மாவும், துணைக்கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த அணியில் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் இடம்பிடித்துள்ளன.
மேலும், நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை மற்றும் அணிகளின் குழுக்களையும் ஐசிசி சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில், உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகளின் பயிற்சி போட்டிக்கான ஆட்டவணையை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஜூன் 1ஆம் தேதி வஙக்தேச அணியும் பயிற்சி போட்டியில் விளையாடவுள்ளது.