Advertisement

ஐசிசி டி20 உலகக்கோப்பை தூதர்கள் வரிசையில் ஷாஹித் அஃப்ரிடி சேர்ப்பு!

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான தூதர்கள் வரிசையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி சேர்க்கப்பட்டுள்ளார்.

Advertisement
ஐசிசி டி20 உலகக்கோப்பை தூதர்கள் வரிசையில் ஷாஹித் அஃப்ரிடி சேர்ப்பு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தூதர்கள் வரிசையில் ஷாஹித் அஃப்ரிடி சேர்ப்பு! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 24, 2024 • 08:58 PM

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஏனெனில் மொத்தம் 20 அணிகள் இத்தொடரில் பங்கேற்கவுள்ளதால் இதில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இத்தொடருக்காக ஒவ்வொரு அணியும் இத்தொடருக்காக தீவிரமாக தயாராகியும் வருகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan
May 24, 2024 • 08:58 PM

இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கு அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அந்தவகையில் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் ஏறத்தாழ அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணி மட்டும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் உலகக்கோப்பை தொடருக்கான அணியை அறிவிப்பதற்கு மே 26ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளதால், அதற்கு பாகிஸ்தான் அணி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Trending

இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான தூதராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் ஷாகித் அஃப்ரிடியை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் மற்றும் ஜமைக்காவைச் சேர்ந்த ஜாம்பவான் தடகள வீரர் உசைன் போல்ட் ஆகியோர் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் தூதர்களாக நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

அந்த வரிசையில் தற்போது பாகிஸ்தானின் ஷாஹித் அஃப்ரிடியும் இணைந்துள்ளார். பாகிஸ்தான் அணிக்காக இதுவரை 27 டெஸ்ட், 398 ஒருநாள் போட்டிகள் மற்றும் 99 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி பேட்டிங்கில் 11 சதங்கள் உள்பட 11ஆயிரத்திற்கு மேற்பட ரன்களையும், பந்துவீச்சில் 10 முறை 5 விக்கெட் ஹால் உடன் 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement