சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியது ஐசிசி!
இனிமேல் எந்த ஒரு போட்டியிலும் ஸ்டம்பிங் முறையில் விக்கெட் கீப்பர் அவுட் கேட்கும் போது பேட்ஸ்மேன் எட்ஜ் கொடுத்தாரா என்பதை 3ஆவது நடுவர் ஸ்னிக்கோ மீட்டரில் சோதிக்க மாட்டார்கள் என்று ஐசிசி அறிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் ஒவ்வொரு ஆண்டிலும் தேவைக்கேற்ப புதிய விதிமுறைகள் கொண்டு வரப்படும். குறிப்பாக கிரிக்கெட் போட்டியை சிறந்த வழியில் நடத்துவதற்கு அவ்வப்போது அடிப்படை விதிமுறைகளில் புதிய மாற்றங்களை ஐசிசி செய்துவருகிறது. அந்த வரிசையில் தற்போது பேட்ஸ்மேன் கொடுக்கும் கேட்ச் மற்றும் ஸ்டம்ப்பிங் ஆகியவற்றை மறுபரிசீலனை செய்யும் முடிவில் ஐசிசி புதிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.
ஏனெனில் விக்கெட் கீப்பர் ஸ்டம்பிங் செய்ததற்கு நடுவரிடம் அப்பீல் கோரி, அது 3ஆவது நடுவருக்கு சென்றால், அதனை 3வது நடுவர் கீப்பர் கேட்சையும் சோதனை செய்வார். அதன்பின்னர் ஸ்டம்பிங் சோதனை செய்வார். இது பவுலிங் செய்யும் அணிக்கு சாதகமாக இருந்து வந்தது. அண்மையில் கூட ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி ஸ்டம்பிங் செய்து நடுவரிடம் அவுட் என்று அப்பீல் செய்ய, அது 3ஆவது நடுவரின் தீர்ப்புக்கு சென்றது.
Trending
அப்போது பவுலிங் அணி டிஆர்எஸ் விதிமுறை கேட்காமலேயே கீப்பர் கேட்ச் சோதிக்கப்பட்டது. இந்நிலையில் ஐசிசி தரப்பில் இந்த விதிமுறை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் லெக் சைட் நடுவர் ஸ்டம்பிங் தீர்ப்புக்காக 3ஆவது நடுவரிடம் முடிவை கொண்டு சென்றால், அங்கு லெக் அல்லது ஆஃப் திசையில் உள்ள கேமராக்களின் மூலமாக மட்டுமே சோதனை செய்யப்படும் என்றும், கீப்பர் கேட்ச் பிடிக்கப்பட்டதற்கான ஸ்னிக்கோமீட்டர் சோதனை செய்யப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் தலையில் காயமடையும் வீரருக்கு பதிலாக சப்ஸ்டிடியூட் வீரர் புதிதாக உள்ளே வந்து பேட்டிங், பவுலிங் ஆகிய அனைத்தையும் செய்யலாம் என்ற விதிமுறை நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால் இனிமேல் அப்படி சப்ஸ்டிடியூட் வீரராக உள்ளே வரும் வீரர் ஒருவேளை விதிமுறையை மீறிய ஆக்சனை கொண்டிருப்பதற்காக தடை பெற்றிருக்கும் பட்சத்தில் பந்து வீச அனுமதிக்கப்படாது என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
மேலும் ஒரு வீரர் காயமடையும் பட்சத்தில் அவருக்கு அதிகபட்சமாக 4 நிமிடத்திற்குள் முதலுதவி செய்து முடிக்க வேண்டும் என்ற விதிமுறையையும் ஐசிசி உருவாக்கியுள்ளது. ஏற்கனவே பரிசோதனை முயற்சியில் ஸ்டாப் டைமர் முறை நடைமுறையில் உள்ள நிலையில், ஆட்டங்களை சரியான நேரத்தில் முடிக்க ஐசிசி பல்வேறு புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now