Advertisement

நாக் அவுட் போட்டிகளுக்கான ரிசர்வ் டேவை அறிவித்தது ஐசிசி!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதிப் போட்டியானது மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டால், ரிசர்வ் டேவை பயன்படுத்தலாம் என ஐசிசி அறிவித்துள்ளது.

Advertisement
நாக் அவுட் போட்டிகளுக்கான ரிசர்வ் டேவை அறிவித்தது ஐசிசி!
நாக் அவுட் போட்டிகளுக்கான ரிசர்வ் டேவை அறிவித்தது ஐசிசி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Nov 14, 2023 • 12:15 PM

ஐசிசி உலகக் கோப்பை போட்டியில் 45 லீக் ஆட்டங்கள் முடிவுற்று தற்போது நாக் அவுட் கட்டத்தை எட்டியுள்ளது. மும்பையில் நாளை மும்பை வாங்டே மைதானத்தில் இந்தியா-நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. கடந்த 2019ஆம் ஆண்டு அரையிறுதியில் நியூஸிலாந்திடம் தோற்று இறுதி வாய்ப்பை இழந்தது இந்தியா. அதற்கு பழிதீர்க்கும் வகையில் தற்போதைய அரையிறுதியில் இந்தியா சிறப்பாக விளையாடி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
November 14, 2023 • 12:15 PM

இந்தியா 1983, 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றுள்ளது. நியூசிலாந்து அணி ஒருமுறை கூட பட்டம் வெல்லவில்லை. இந்த உலகக் கோப்பையில் முதலிடத்தில் இருந்த நியூசிலாந்து தட்டுத்தடுமாறி 4ஆவது இடத்தைப் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆனால் இந்தியா 9 லீக் ஆட்டங்களிலும் வென்று தகுதி பெற்றது.

Trending

கொல்கத்தாவில் நாளை மறுநாள் நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் 5 முறை சாம்பியன் ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா மோதுகின்றன. ஆஸ்திரேலியா அணி முதலிரண்டு ஆட்டங்களில் தோற்ற நிலையில், தொடர்ச்சியாக 7 ஆட்டங்களில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது. தென் ஆப்பிரிக்காவும் 7 ஆட்டங்களில் வெற்றியுடன் நுழைந்துள்ளது. முதன்முறையாக உலகக் கோப்பை இறுதிக்கு தென் ஆப்பிரிக்கா தகுதி பெறுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவுள்ள அரையிறுதி போட்டிகள், நவம்பர் 19ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டி ஆகியவை மழையின் காரணமாக தடைபெற நேரிட்டால் இருப்பு நாட்களில் (ரிசர்வ் டே) போட்டிகள் நடைபெறும் என ஐசிசி அரிவித்துள்ளது.

மேலும் இந்த தொடரின் மொத்த பரிசுத்தொகை 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் எனவும், தொடரின் வெற்றியாளருக்கு 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும் எனவும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடரில் பங்கேற்ற 10 அணிகளுக்கும் தலா 40 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement