Advertisement

சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் புதிய விதியை அறிமுகப்படுத்திய ஐசிசி!

சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஸ்டாப் கிளாக் விதிமுறை சோதனை அடிப்படையில் புதிய விதியை கொண்டு வர ஐசிசி முடிவு செய்துள்ளது. 

Advertisement
சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் புதிய விதியை அறிமுகப்படுத்திய ஐசிசி!
சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் புதிய விதியை அறிமுகப்படுத்திய ஐசிசி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Nov 21, 2023 • 08:38 PM

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை ஐசிசி மற்றும் பிசிசிஐ இணைந்து வெற்றிகரமாக நடத்தி முடித்தியுள்ளது. உலகக்கோப்பை வரலாற்றிலேயே அதிக ரசிகர்கள் பார்த்த உலகக்கோப்பை தொடராக அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளை கூடுதல் சுவாரஸ்யமாக்க ஐசிசி முடிவு செய்துள்ளது.இதற்காக புதிய விதிகளை கொண்டு வர ஐசிசி முடிவு செய்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
November 21, 2023 • 08:38 PM

அதன்படி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் பந்துவீச்சாளர் ஒருவர் ஒரு ஓவருக்கும் அடுத்த ஓவருக்கும் இடையே 60 விநாடிகளுக்கு மேலாக 3 முறை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும் என ஐசிசி புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விதியை டிசம்பர் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை சோதனை முறையில் அமல்படுத்த ஐசிசி செயற்குழு கூட்டத்தில்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கால்பந்து விளையாட்டை போல் கிரிக்கெட்டிலும் ஸ்டாப் கிளாக் நடைமுறை அமலுக்கு வருகிறது. 

Trending

இந்த விதிகள் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இந்த விதியினை ஐசிசி சோதனை முயற்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜூன் மாதம் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு சோதனை முயற்சியாக இதனை ஐசிசி செய்யவுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு முதல் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் கடைசி ஓவரை வீச தொடங்கவில்லை என்றால், அந்த ஓவருக்கு 30 யார்ட் வளையத்திற்குள் வெளியில் இருக்கும் ஒரு ஃபீல்டரை உள்ளே அழைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக ஐசிசி தரப்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் பந்துவீச்சாளர் ஒருவர் ஒரு ஓவருக்கும் அடுத்த ஓவருக்கும் இடையே 60 விநாடிகளுக்கு மேலாக 3 முறை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும் என்ற  புதிய விதிமுறையை ஐசிசி சோதனை முயற்சியில் அறிமுகப்படுத்துகிறது. இந்த புதிய விதிமுறை டிசம்பர் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை முதல் கட்டமாக சோதனை முயற்சியில் கடைபிடிக்கப்படும். இரண்டு ஓவர்களுக்கு இடையே பந்துவீச்சாளர் எடுத்துக் கொள்ளும் நேரத்தினை கணக்கிட கடிகாரம் பயன்படுத்தப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement